என் மலர்
செய்திகள்

அரிசி
கொரோனாவால் பாதித்த ஏழை குடும்பங்களுக்கு டிஐஜி சந்திரன் நிவாரண உதவி
புதுவையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி பின்பு அருணாச்சல பிரதேசத்தில் அதே பதவியில் பணிபுரியும் சந்திரன் புதுவையில் உள்ள ஏழை மக்களுக்கு நிவாரண உதவி வழங்க ஏற்பாடு செய்தார்.
பாகூர்:
உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் புதுவை மாநிலத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறபித்துள்ளது. இதனால் ஏழை மக்கள் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
ஏழை மக்களுக்கு அரசு மற்றும் அரசியல் பிரமுகர்கள், பல்வேறு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் புதுவையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி பின்பு அருணாச்சல பிரதேசத்தில் அதே பதவியில் பணிபுரியும் சந்திரன் புதுவையில் உள்ள ஏழை மக்களுக்கு நிவாரண உதவி வழங்க ஏற்பாடு செய்தார்.
அந்த வகையில் பெருமாள் தலைமையில் விஷ்ணுவரதன் மற்றும் அபிஷேகப்பாக்கம் இளைஞர் அமைப்பு மூலம் 5 கிலோ அரிசி அபிஷேகப்பாக்கத்தில் உள்ள 500 ஏழை குடும் பங்களுக்கு வீடு, வீடாக சென்று வழங்கினர்.
Next Story






