என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
கொரோனா அறிகுறி உள்ளவர்களை அழைத்து செல்ல தனி ஆம்புலன்ஸ்- அரசுக்கு கோரிக்கை
கொரோனா அறிகுறி உள்ளவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல தனி 108 ஆம்புலன்சை ஒதுக்க வேண்டும் என்று ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சங்க தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சங்க தலைவர் புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் விபத்து மற்றும் பிரசவம் உள்ளிட்ட அவசர சிகிச்சை தேவைப்படுவோரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ்கள் 8 இயக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. பல ஆம்புலன்ஸ்களில் டெக்னீஷியன்கள் இல்லை.
மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை குறைவான சம்பளம் பெறும் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு ஏப்ரல் சம்பளம் வழங்காதது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோய் தொற்று உள்ள இச்சமயத்தில் ஆம்புலன்ஸ் பணி முக்கியமானதாக உள்ளது. கொரோனா நோய் தொற்றுள்ளவர்களை ஏற்றி செல்லும் ஆம்புலன்சில் பேறு கால சிகிச்சைக்காக கர்ப்பிணி பெண்களை ஏற்றி சென்றால் அவர்கள் பாதிப்பதோடு பிறக்கும் குழந்தைக்கும் தொற்று ஏற்படும் நிலை உண்டாகும். அதுபோல் பிற நோயாளிகளும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே ஏப்ரல் மாதத்துக்கான சம்பளத்தை உடனடியாக வழங்குவதுடன், கொரோனா அறிகுறி உள்ளவர்களை அழைத்து செல்ல தனி 108 ஆம்புலன்சை ஒதுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Next Story