என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி
    X
    புதுச்சேரி

    புதுவையிலும் தொழிற்சாலைகளில் 72 மணி நேர வேலை- அரசு அறிவிப்பு

    புதுவையில் தொழிற்சாலைகள் உற்பத்தியை பெருக்க 3 மாதத்திற்கு மட்டும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணிநேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தி தொழிலாளர் துறை உத்தரவிட்டது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன.

    கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய தொழிற்சாலைகள் தவிர்த்து மற்ற தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும் பழைய படி உற்பத்தி இல்லை. மீண்டும் உற்பத்தியை அதிகரிக்க தொழிற்சாலைகள் பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில் மாநிலத்தில் தொழிற்சாலைகள் உற்பத்தியை பெருக்க 3 மாதத்திற்கு மட்டும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணிநேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தி தொழிலாளர் துறை உத்தரவிட்டது. இருப்பினும் சில நிபந்தனைகளை தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்கள் துறை விதித்துள்ளது.

    இதன்படி ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளர் 12 மணி நேரத்திற்கு மேலாக பணி செய்ய தொழிற்சாலைகள் விடக்கூடாது. அத்துடன் அவர் வாரத்திற்கு 72 மணி நேரத்திற்கு மேல் பணி புரிய வைக்கக்கூடாது.

    12 மணி நேர வேலையில் முதல் 6 மணி பிறகு குறைந்தபட்சம் தொழிலாளிக்கு அரைமணி நேரம் ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது. ஓவர் டைமிங் வேலைக்காக பணியாளர்களின் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

    இதற்கான உத்தரவை தொழிலாளர் துறை சிறப்பு செயலர் வல்லவன் பிறப்பித்துள்ளார்.

    இதனை வரவேற்று இந்திய தொழில் கூட்டமைப்பு புதுவை தலைவர் சங்கரநாராயணன் கூறுகையில், 3 மாதத்திற்கு தொழிலாளர்களின் பணி நேரம் 12 மணி நேரமாக அதிகரித்துள்ளதை வரவேற்கிறோம். இதன் மூலம் மாநிலத்தில் உற்பத்தி அதிகரிக்கும். குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீண்டும் உற்பத்தி பாதைக்கும் திரும்ப வழிவகுக்கும் என்றார்.


    Next Story
    ×