என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    யூடியூப்பை பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சிய மெக்கானிக் கைது

    ஈரோடு மாவட்டம் பவானியில் யூடியூப்பை பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.
    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள தேவராஜன் சந்திப்பில் வசிப்பவர் ரமேஷ் (49). டி.வி. மெக்கானிக்.

    இவர் மார்க்கெட் பகுதிகளில் இருந்து அழுகிய பழங்கள் மற்றும் வெல்லம் உள்ளிட்ட பொருட்களை அதிக அளவில் வாங்கி சென்றுள்ளார். இது அப்பகுதியில் உள்ளவர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மெக்கானிக் ரமேஷ் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட மண் பானையில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருந்தது தெரிய வந்தது.

    குக்கர் மூலம் அடுப்பில் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. ரமேசிடம் போலீசார் விசாரித்த போது டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து மது வாங்க முடியவில்லை. எனவே வீட்டில் யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்ச முயன்றதாக தெரிவித்தார்.

    அவரை போலீசார் கைது செய்தனர். சாராயம் காய்ச்ச பயன்படுத்திய 20 லிட்டர் ஊறலையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×