என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
    X
    அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

    புதுவையில் 8 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை- அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

    புதுவை அரசு மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் 8 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பேரும், மாகி அரசு மருத்துவமனையில் ஒருவரும் என 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் புதுவையை சேர்ந்த ஒரு நோயாளிக்கு பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் இன்று வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்.

    நேற்றைய தினம் மதகடிப்பட்டு குச்சிபாளையத்தை சேர்ந்த லாரி டிரைவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதனால் புதுவை, மாகி அரசு மருத்துவமனைகளில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிப்மர் மருத்துவமனையில் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 3 பேர் சிகிச்சை பெற்றனர் .

    விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த 2 பேர் அங்கு கூடுதலாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒட்டுமொத்தமாக புதுவை அரசு மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் 8 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையின் அண்டை மாவட்டமான கடலூர் மற்றும் விழுப்புரத்தில் நேற்றைய தினம் மட்டும் 77 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது.

    இதனால் புதுவை மக்கள் யாரும் அநாவசியமாக கடலூர்- விழுப்புரம் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

    Next Story
    ×