என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுவை அரசு ஆஸ்பத்திரியில் மேலும் ஒரு கொரோனா நோயாளி

    கோயம்பேடு சென்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த ஜிப்மர் ஊழியரின் மகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோயம்பேடு சென்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த ஜிப்மர் ஊழியரின் மகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரை ஜிப்மரில் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

    தமிழக பகுதியை சேர்ந்த நீரழிவு நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளோம்.

    இவ்வாறு மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

    புதுவையில் ஏற்கனவே 10 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் ஒருவர் மரணம் அடைந்தார்.

    6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். 3 பேருக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தவிர, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×