என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேசன் கடை
    X
    ரேசன் கடை

    ரே‌ஷன் கடைகளில் இலவச பொருட்கள் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்

    ரே‌ஷன் கடைகளில் இலவச பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் இலவச பொருள்களை வழங்கி தொடங்கி வைத்தனர்.

    சூரம்பட்டி:

    கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் ரே‌ஷன் கடைகளில் இலவச பொருட்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த மாதமும் இலவச பொருட்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் சர்க்கரை, எண்ணெய், பருப்பு, அரிசி, கோதுமை ஆகிய பொருட்கள் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

    ஈரோடு எஸ்.கே.சி ரோட்டில் உள்ள ஒரு ரே‌ஷன் கடைகளில் இலவச பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் இலவச பொருள்களை வழங்கி தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×