என் மலர்
செய்திகள்

சசிகுமார்- அபிநயா.
சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் திருமணம்- சரத்குமார் காணொளியில் வாழ்த்து
வேலூரில் எளிய முறையில் சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சரத்குமார் காணொளி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மத்திய மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிமாவட்ட செயலாளர் சசிகுமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அபிநயா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக இவர்களது திருமணம் ஓட்டேரி காமாட்சிபுரம் பகுதியிலுள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் உறவினர்கள் 20 பேருடன் எளிமையான முறையில் நடந்தது.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் காணொளி மூலம் சசிகுமார், அபிநயா தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Next Story






