search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன்
    X
    அமைச்சர் செங்கோட்டையன்

    குழு அமைத்து ஆய்வு செய்த பின்னர் பள்ளி திறப்பு குறித்து அறிவிக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

    கொரோனா தாக்கம் முற்றிலும் இல்லை என அறிவித்த பின்னர் முதல்வர் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்த பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரையில் ஆசிரியர்கள் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட தயாராக உள்ளனர். முதன்மை கல்வி அலுவலர் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் விருப்பம் உள்ள ஆசிரியர்களின் பெயர்கள், செல்போன் எண் மாவட்ட கலெக்டர்களிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.

    மத்திய, மாநில அரசுகள் கொரோனா தாக்கம் முற்றிலும் இல்லை என அறிவித்த பின்னர் முதல்வர் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்த பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவிப்பார்.

    பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடபுத்தகங்கள், ஷூ, ஷாக்ஸ் போன்ற பொருட்கள் தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×