என் மலர்

  செய்திகள்

  திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு
  X
  திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு

  தமிழக முழு ஊரடங்கினால் புதுவையில் கூட்டம் குறைந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவைக்குள் யாரும் நுழையாதவாறு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் சாலைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
  புதுச்சேரி:

  கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுவையில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது. பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்குள் வந்தால், நோய் தொற்று அதிகமாகும் என்பதால், புதுவை எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மாநிலத்துக்குள் நுழையும் 82 நுண்ணிய பாதைகளும் அடைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

  இந்த நிலையில் தமிழக பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்த மாவட்டங்களில் இருந்து மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு புதுச்சேரி வரும் மக்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக குறைந்தது.

  வாகனங்கள் அனைத்தும் புதுவை எல்லை பகுதிக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டன. புதுவைக்குள் யாரும் நுழையாதவாறு ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதனால் புதுவை சாலைகளில் காலை நேரத்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
  Next Story
  ×