என் மலர்
செய்திகள்

தீ விபத்து
வடமதுரை அருகே குடிசைக்கு தீ வைப்பு- போலீசார் விசாரணை
வடமதுரை அருகே நேற்று இரவு குடிசை வீட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள நைனான் குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 65). இவர் தனக்கு சொந்தமான குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு இவரது குடிசை வீட்டுக்கு யாரோ மர்ம நபர் தீ வைத்தனர்.
இதனால் குடிசை பற்றி எரிந்தது. உடனே பாப்பாத்தி வெளியில் ஓடி வந்து உயிர் தப்பினார். இந்த விபத்தில் குடிசை முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தும் தீயை அணைக்க முடியவில்லை.
இந்த தீ விபத்தில் பாப்பாத்தி வைத்திருந்த உணவு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தன. இது தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






