என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டுகள்
    X
    ரூபாய் நோட்டுகள்

    ஊரடங்கால் வேலையிழப்பு- கோவில் திருவிழா நிதியை நிவாரணமாக வழங்கிய நிர்வாகிகள்

    ஊரடங்கு உத்தரவு காரணமாக டி.மீனாட்சிபுரம் கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் கோவில் திருவிழா நிதியை ஒரு குடும்பத்துக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 225 குடும்பங்களுக்கு நிர்வாகிகள் பிரித்து கொடுத்தனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது டி.மீனாட்சிபுரம் கிராமம். இங்கு திருவேட்டை அய்யனார், காளியம்மன், முத்தாலம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் திருவிழாவை நடத்துவதற்காக ரூ. 7 லட்சம் நிதி இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

    தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக டி.மீனாட்சிபுரம் கிராம மக்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குடும்ப படகை ஓட்ட மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    எனவே மக்களின் பசியைப் போக்க கோவில் திருவிழா நிதியை பிரித்துக் கொடுக்க நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி ரூ. 7 லட்சம் நிதியில் 6 லட்சத்து 75 ஆயிரத்தை ஒரு குடும்பத்துக்கு ரூ. 3 ஆயிரம் வீதம் 225 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்தனர். இதனால் கிராம மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    Next Story
    ×