என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்சல் உணவு
    X
    பார்சல் உணவு

    புதுவையில் இன்று முதல் ஓட்டல்கள் மீண்டும் இயங்க தொடங்கின

    புதுவையில் கடந்த 22-ந் தேதி மூடப்பட்ட உணவகங்கள் இன்று முதல் இயங்க தொடங்கியிருக்கின்றன. பொதுமக்கள் அதிக அளவில் கூடி நோய் தொற்று ஏற்படாத வகையில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
    புதுச்சேரி:

    கொரோனா நோய் தொற்று எச்சரிக்கை காரணமாக புதுவையில் உள்ள உணவகங்கள், மதுபானக் கூடங்கள் போன்றவை மூடப்பட்டன.

    கடந்த 22-ந் தேதி மூடப்பட்ட இந்த உணவகங்கள் இன்று முதல் இயங்க தொடங்கியிருக்கின்றன.

    அவற்றிலும் பொதுமக்கள் அதிக அளவில் கூடி நோய் தொற்று ஏற்படாத வகையில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்படவில்லை.

    இதன் காரணமாக குறைந்த அளவிலேயே உணவகங்கள் திறந்துள்ளன. புதுவை அரசின் கூட்டுறவு நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்தியன் காபி ஹவுசின் அனைத்து கிளைகளிலும் இன்று திறக்கப்பட்டன.

    காலை முதலே அனைத்து உணவுகளும் தயார் செய்யப்பட்டு பார்சல் மூலம் அனுப்பப்படுகிறது. பார்சல் வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இருப்பினும், உயர்ரக என அழைக்கப்படும் பெரிய ஓட்டல்கள் உட்கார்த்து சாப்பிட அனுமதி இல்லாததால் திறக்கப்படவில்லை.
    Next Story
    ×