என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீரன் சின்னமலை உருவ சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    தீரன் சின்னமலை உருவ சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    சிவகிரியில் உள்ள தீரன் சின்னமலை உருவ சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

    சிவகிரியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை உருவ சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
    சிவகிரி:

    சிவகிரியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை உருவ சிலை உள்ளது. தீரன் சின்னமலை பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் தீரன் சின்னமலை உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அங்கு கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    Next Story
    ×