என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    20-ந்தேதி முதல் மின்கட்டணத்தை செலுத்தலாம்- புதுவை மின்துறை அறிவிப்பு

    புதுவையில் 20-ந்தேதி முதல் தினமும் காலை 9 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என மின்துறை அறிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மின் கட்டண வசூல் மையங்கள் கடந்த மாதம் முதல் செயல்படவில்லை.

    இந்த நிலையில் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது மின்கட்டணத்தை செலுத்த ஏதுவாக வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தினமும் காலை 9 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை மின் கட்டண வசூல் மையங்கள் செயல்பட உள்ளது.

    எனவே மின் நுகர்வோர்கள் தங்களது முந்தைய கணக்கீட்டு பட்டியல் அல்லது நுகர்வோர் எண்ணை தெரிவித்து மின்கட்டணத்தை சமூக இடைவெளியை கடைபிடித்து செலுத்தலாம். மேலும் ஆன்லைனில் https:--pedservices.pdy.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவும் செலுத்தலாம் என புதுவை மின் துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×