என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா விழிப்புணர்வு ஓவியம்
    X
    கொரோனா விழிப்புணர்வு ஓவியம்

    திமிரி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்

    திமிரி பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விழிப்புணர்வு ஓவியம் சாலையில் வரையப்பட்டது.

    ஆற்காடு:

    திமிரி பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திமிரி பஜாரில் நடந்தது.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், இன்ஸ்பெக்டர் காண்டீபன், அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் ‌ஷர்மிளா, வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர்ஞானவேல், முன்னிலையில் திமிரிசேர்ந்த ஓவியர்கள் இளைஞர்கள் உட்பட பலர் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியம் சாலையில் வரைந்தனர். மேலும் வைரஸ் பரவலை தடுக்க உறுதி மொழி ஏற்றனர்.

    Next Story
    ×