என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மேட்டுப்பாளையத்தில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்ற வாலிபர் கைது

    மேட்டுப்பாளையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்களை புதரில் மறைத்து வைத்து அதிக விலைக்கு விற்ற வாலிபரை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று மாலை மேட்டுப்பாளையம்- குண்டு சாலை சந்திக்கும் பகுதியில் ரோந்து பணி சென்றனர்.

    அப்போது அங்கு பூட்டி வைக்கப்பட்டு இருந்த தனியார் மதுக்கடை எதிரே உள்ள முள் புதரில் சந்தேகபடும்படி ஒரு வாலிபர் நின்றுகொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடிக்க முயன்ற போது அவர் தப்பியோட முயன்றார். ஆனாலும் போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் வேல்ராம்பட்டை சேர்ந்த முரளி (வயது34) என்பதும், இவர் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி அதை முள்புதரில் மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து முள்புதரில் மறைத்து வைத்திருந்த ரூ20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டிலை போலீசார் பறிமுதல் செய்து முரளியை கைது செய்தனர்.

    Next Story
    ×