என் மலர்
செய்திகள்

கலெக்டர் வீரராகவ ராவ்
கொரோனா பாதிப்பை தடுக்க தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்- கலெக்டர் வேண்டுகோள்
கொரோனா பாதிப்பை தடுக்க தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் வீரராகவ ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லி மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 41 நபர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 25 நபர்கள் மட்டும் திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவரின் ரத்த மாதிரியும் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் கடந்த 2-ந்தேதி அன்று 2 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள 23 நபர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் வரப்பெற்றுள்ளன. அந்த வகையில் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 34 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 32 நபர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 4,777 நபர்கள் திரும்பியுள்ளனர். அவர்களில் 2,711 நபர்கள் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைந்து கொரோனா அறிகுறி ஏதும் இல்லாமல் நலமுடன் உள்ளனர்.
மீதமுள்ள 2,066 நபர்கள் தற்போது அவரவர் குடும்பத்தாருடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் வீடுகளில் மாவட்ட நிர்வாகம் மூலம் ஸ்டிக்கர் ஒட்டி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்ததாக பொது சுகாதாரத்துறையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் உடல் கீழக்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இறந்தவரின் குடும்பத்தார் 11 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் அவரது இறுதிச் சடங்கில் சுமார் 50 நபர்கள் பங்கேற்றதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் தாமாக அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இறந்தவரின் குடியிருப்பை சுற்றி உள்ள பகுதிகளில் நகராட்சி மற்றும் தீயணைப்பு துறையின் மூலம் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் சுற்றுப்புற சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் இறந்தவரின் குடியிருப்பிலிருந்து 7 கி.மீ. சுற்றளவிற்குட்பட்ட அனைத்து வீடுகளிலும் பொது சுகாதாரத்துறையினர் மூலம் ஒவ்வொரு வீடாக நேரடியாகச் சென்று பரிசோதனை மற்றும் அறிகுறி கண்காணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story