search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் ஒருவருக்கு முகக்கவசம், கிருமிநாசினி வழங்கப்பட்ட போது எடுத்த படம்.
    X
    மத்திய கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் ஒருவருக்கு முகக்கவசம், கிருமிநாசினி வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

    மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

    நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வினோத் தலைமை தாங்கினார். முகாமில் வங்கிக்கு வந்த பணியாளர்கள் மற்றும் பணம் செலுத்த, கடன் பெற வந்த வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசங்கள், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் கிருமிநாசினி கொடுக்கப்பட்டு, கைகளை சுத்தம் செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    வங்கியில் இருக்கைகள், மேஜைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. தினமும் நுழைவுவாயிலில் இருமலுடன் யாரேனும் வந்தால், அவர்களுக்கு முகக்கவசம் வழங்கவும், மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் நிர்வாக இயக்குனர் வசந்தா, பொது மேலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×