என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
மது குடிக்க பணம் தர மறுத்ததால் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் - தொழிலாளிக்கு வலைவீச்சு
மது குடிக்க பணம் தர மறுத்ததால் வாலிபரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருபுவனை:
திருபுவனை அருகே சன்னியாசிக்குப்பம் குயவர் தெருவை சேர்ந்தவர் சக்தி வேல் (வயது 20). பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.
நேற்று மாலை சக்திவேல் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சசிக்குமார் என்பவர் சக்தி வேலுவை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டார்.
அதற்கு சக்திவேல் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சசிக்குமார் தகாத வார்த்தைகளால் திட்டி கீழே கிடந்த கருங்கற்களால் சக்தி வேலுவை தாக்கினார். மேலும் இதுபற்றி போலீசில் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த சக்திவேல் அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து சசிக்குமாரை தேடி வருகிறார்.

Next Story