என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ் தொடர்பாக மாவட்ட கலெக்டர் அருண் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டம்
புதுவையில் கொரோனா பாதிப்பு இல்லை- அதிகாரிகள் தகவல்
புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்று கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுச்சேரி:
கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதற்கு இதுவரை எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தலைமை தாங்கினார். துணை கலெக்டர்கள் சக்திவேல், தமிழ்ச்செல்வம், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், துணை இயக்குனர் ரகுநாத் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுவை அரசு துறைகள் சார்பில் பேரிடர் மேலாண்மை அமைப்பை உருவாக்கி மக்கள் அதிகம் கூடும் இடமான பஸ் நிலையம், ரெயில் நிலையம், கடற்கரை ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை தொடர்ந்து இருந்தால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுவையில் முக கவசம் (மாஸ்க்) தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் சுகாதாரம், பள்ளி கல்வி, சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் துணை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

Next Story