என் மலர்
செய்திகள்

கொடுக்காபுளி
கொடுக்காபுளி சாப்பிட்டால் கொரோனா வராது- புதுவை எம்எல்ஏ சொல்கிறார்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை தடுக்க கொடுக்காபுளி சாப்பிட்டால் வைரஸ் தாக்காது என்று புதுவை எம்எல்ஏ ஜான்குமார் பேசியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் மகளிர் தினவிழா ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவில் ஜான்குமார் எம்.எல்.ஏ. வாழ்த்தி பேசினார். அவர் பேசும்போது,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை தடுக்க எளிய வழிமுறைகள் உள்ளது. கொடுக்காபுளி அல்லது காட்டு நெல்லிக்காய் அல்லது சின்ன வெங்காயத்துடன் பூண்டு சேர்த்து சாப்பிட்டால் கொரோனா வராது.

பழையசோறும், பழவகைகளும் தினமும் சாப்பிட்டால் கொரோனா மட்டுமில்லை, மரணம் கூட வராது. இது தவிர நாள்தோறும் காலையில் அரை மணி நேரம், மாலையில் அரை மணி நேரம் வெயிலில் நிற்க வேண்டும் என்று கூறினார்.
Next Story






