என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    மேட்டுப்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் வாலிபர் பலி

    மேட்டுப்பாளையத்தில் டயர் வெடித்ததால் மோட்டார் சைக்கிள் தாறு மாறாக ஓடி கவிழ்ந்ததில் வாலிபர் பலியானார்.
    புதுச்சேரி:

    புதுவை அருகே தமிழக பகுதியான வாழப்பட்டாம் பாளையம்  மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் பன்னீர்செல்வம் (வயது31). டைல்ஸ் தொழிலாளி. நேற்று இவர் திருக்காஞ்சியில் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரியை காண மோட்டார் சைக்கிளில் வந்தார். 

    பின்னர் திருக்காஞ்சி நிகழ்ச்சியை கண்டுகளித்து விட்டு புதுவை வந்த பன்னீர் செல்வம் அதன் பிறகு வீட்டுக்கு புறப்பட்டு  சென்றார். மேட்டுப்பாளையம் வழுதாவூர் சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே வந்த போது திடீரென மோட்டார் சைக்கிளின் முன்பக்க டயர் வெடித்தது.  

    இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் பன்னீர்செல்வத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் பன்னீர்செல்வத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு  கொண்டு செல்லப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே பன்னீர் செல்வம் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் மதியழகன் கொடுத்த புகாரின்பேரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×