என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குடியுரிமை சட்டத்தை கண்டித்து 15-வது நாளாக முஸ்லிம்களின் காத்திருப்பு போராட்டம் நீடிப்பு

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து ஈரோட்டில் முஸ்லிம்களின் போராட்டம் 15-வதுநாளாக நீடித்து வருகிறது. ன்று நடந்த காத்திருப்பு போராட்டத்தில் முஸ்லிம் பெண்கள் அதிகளவில் பங்கேற்றனர்.
    ஈரோடு:

    மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், முஸ்லிம் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோட்டிலும் முஸ்லிம் அமைப்புகள் கடந்த 21-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு செல்ல பாஷா வீதியில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். அது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பியவாறு உள்ளனர். நாளுக்கு நாள் காத்திருப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

    இந்நிலையில் அவர்களின் போராட்டம் இன்று 15- வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று நடந்த காத்திருப்பு போராட்டத்தில் முஸ்லிம் பெண்கள் அதிகளவில் பங்கேற்றனர். இதே போன்று பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் நேரடியாக சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இன்று மாலை போராட்ட களத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பாப்புலர், ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் காலித் முகமது கண்டன உரையாற்ற உள்ளனர். இதைத்தொடர்ந்து போராட்ட காலத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற உள்ளது.
    Next Story
    ×