search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை பவுனுக்கு 624 ரூபாய் குறைந்தது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தங்கம் விலை இன்று பவுனுக்கு 624 ரூபாய் குறைந்தது. நகைக்கடைகளில் ஒரு பவுன் தங்கம் ரூ.31 ஆயிரத்து 888-க்கு விற்பனையானது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஆண்டு முதல் மிக அதிக அளவில் அதிகரிப்பதும், பிறகு சிறிது குறைவதுமாக உள்ளது.

    சர்வதேச அளவில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள், தங்கம் மீதான முதலீடுகள் ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வதாக இருந்தன.

    இந்த நிலையில் கடந்த மாதம் சீனாவில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவுவதால் அது பங்கு சந்தைகளையும் பாதிக்க தொடங்கி உள்ளது. இதனால் பங்கு சந்தை முதலீடுகள் ஆட்டம் கண்டுள்ளன.

    இதன் காரணமாக பங்கு சந்தை முதலீட்டாளர்கள் தங்களது கவனத்தை தங்கம் மீது திருப்பி உள்ளனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது கடந்த மாதம் முதல் கணிசமாக அதிகரித்து விட்டது. இது தங்கம் விலையில் வரலாறு காணாத உயர்வை ஏற்படுத்தியது.

    கடந்த 18-ந்தேதி முதல் தங்கத்தின் விலை மிக அதிகமாக உயரத் தொடங்கியது. கடந்த மாதம் ஒரு பவுன் விலை ரூ.33 ஆயிரமாக இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் அது ஏறுவதும் இறங்குவதாகவும் இருந்தது.

    கடந்த வார இறுதியில் தங்கம் விலை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்தது. கடந்த 24-ந்தேதி பவுனுக்கு 752 ரூபாய் அதிகரித்தது. இதன் காரணமாக ஒரு பவுன் தங்கம் விலை ரூ.33 ஆயிரத்து 328 ஆக உயர்ந்து மக்களை மிரட்டியது.

    தங்கம் விலை 33 ஆயிரத்தை கடந்ததால் ஏழை-எளிய மக்கள் பீதிக்குள்ளானார்கள். தொடர்ந்து தங்கம் விலை உயரும் என்று தகவல் வெளியானதால் மக்கள் மத்தியில் தவிப்பு ஏற்பட்டது.

    ஆனால் பெண்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கம் விலை கடந்த 4 நாட்களாக ஓரளவு குறைந்து வருகிறது. ஏறிய வேகத்தில் தங்கம் விலை குறைந்ததால் 32 ஆயிரம் ரூபாய்க்கு வந்தது.

    இன்று (சனிக்கிழமை) தங்கம் விலை பவுனுக்கு 624 ரூபாய் குறைந்தது. இதனால் சென்னை நகைக்கடைகளில் ஒரு பவுன் தங்கம் ரூ.31 ஆயிரத்து 888-க்கு விற்பனையானது.

    ஒரு கிராம் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக 4 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வந்தது. இது நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும் வகையில் இருந்தது.

    இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்திற்கு கீழ் வந்தது. கிராமுக்கு ரூ.78 குறைந்து ஒரு கிராம் ரூ.3,986 ஆக விற்பனையானது.

    வெள்ளி விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.1.60 குறைந்து ரூ.47.40-க்கு விற்பனையானது.

    கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.1,440 அளவுக்கு குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. பங்கு சந்தை சீரானால் தங்கத்தின் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×