என் மலர்
செய்திகள்

போலீஸ் விசாரணை
ஈரோடு ஜவுளி நிறுவனத்தில் ஊழியர் மர்ம மரணம்- போலீசார் தீவிர விசாரணை
ஈரோட்டில் ஜவுளி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி அருகே தனியார் லுங்கி, பனியன் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பலர் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்தில் சூரம்பட்டியைச் சேர்ந்த ஒருவர் வேலை செய்து வந்தார். இவர் மார்க்கெட்டிங் மற்றும் கலெக்ஷன் செய்து பணத்தை நிறுவனத்திடம் கொடுப்பார். இந்நிலையில் நேற்று இரவு இவர் நிறுவனத்தில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி மற்ற ஊழியர்கள் இவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் இறந்த ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று பரபரப்பாக கூறப்படுகிறது. அவர் சாவில் மர்மமும் இருப்பதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே அவர் எவ்வாறு இறந்தார்? என தெரிய வரும்.

Next Story