என் மலர்

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    தஞ்சை சரபோஜி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கல்வி உதவி தொகை வழங்க வேண்டும், குடிநீர், கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை சரபோஜி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    கல்வி உதவி தொகை வழங்க வேண்டும், குடிநீர், கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தஞ்சை சரபோஜி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் இந்த கோரிக்கைகள் நிறைவேறாததால் இன்று கல்லூரிக்கு வந்திருந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

    பின்னர் கல்லூரி முன்பு திரண்டு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×