search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    ஆம்பூர் செல்போன் கடையில் காஞ்சிபுரம் போலீஸ் விசாரணை

    காஞ்சிபுரம் கோவில்களை போட்டோ எடுத்தவர்கள் ஆம்பூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் காஞ்சிபுரம் போலீசார் ஆம்பூரில் விசாரணை நடத்தினர்.
    ஆம்பூர்:

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் சுற்றித் திரிந்ததும், அங்கு போட்டோ எடுத்ததும் வாட்ஸ்அப்பில் பரவியது.

    அவர்கள் தீவிரவாத கும்பலா அல்லது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

    இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் போலீசார் விசாரணையை தொடங்கினர். கோவில் அருகில் இருந்து பேசப்பட்ட செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், 2 செல்போனும், சிம்கார்டும் ஆம்பூரில் உள்ள கடையில் வாங்கியதாக தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ஆம்பூர் வந்த காஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    செல்போன் கடையில் இருந்த ஊழியர்களிடம் விவரம் சேகரித்தனர். போலீசார் கைப்பற்றிய 2 முகவரியும் போலியானது என தெரியவந்தது.

    இதையொட்டி ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் ஆம்பூரில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    Next Story
    ×