என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
புலிக்குட்டிகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்த 2 புலிக்குட்டிகளை பார்க்க ஏற்பாடு
By
மாலை மலர்16 Jan 2020 3:03 AM GMT (Updated: 16 Jan 2020 3:03 AM GMT)

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதியதாக பிறந்த 2 புலிக்குட்டிகளை பொதுமக்கள் பார்வையிட பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வண்டலூர்:
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மொத்தம் 27 புலிகள் உள்ளன. அவற்றுள் ஆதித்யா மற்றும் ஆர்த்திக் என்று பெயரிடப்பட்ட புலிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2 குட்டிகள் பிறந்தன. இந்த இரண்டு குட்டிகளும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன.
தற்போது அந்த 2 குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.
இந்த நிலையில், பொங்கல் விடுமுறை தினத்தையொட்டி, வண்டலூர் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களுக்கு இந்த புலிக்குட்டிகளை பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு திரையின் மூலம் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் தை மாதத்தில் சிறப்பாக கிடைக்கும் கரும்பு, பூங்காவில் உள்ள யானைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொங்கல் விடுமுறையில் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் யானையின் இருப்பிடத்திற்கு சென்று காலை 11 மணியளவில் மற்றும் மதியம் 3 மணியளவில் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொங்கல் விடுமுறை தினங்களான வருகிற 19-ந்தேதி வரை பூங்காவிற்கு வருகைத்தரும் பார்வையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர்கள், வாகன நிறுத்துமிடம், சிறப்பு சிற்றுண்டி கடைகள், கூடுதல் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 17-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காணும் பொங்கல் அன்று பார்வையாளர்கள் குடும்பத்துடன் பூங்காவிற்கு சிரமமில்லாமல் வந்து செல்ல 300 பஸ்கள் வசதி செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Next Story
×