என் மலர்
செய்திகள்

புதிய விளையாட்டரங்கு கட்டப்படும் இடத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.
காட்பாடியில் 36 ஏக்கரில் விளையாட்டு அரங்கம்- கலெக்டர் ஆய்வு
காட்பாடியில் 36 ஏக்கர் பரப்பளவில் ரூ.16 கோடியே 45 லட்சம் மதிப்பில் மாவட்ட விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகின்றன. இதனை கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் சென்று பார்வையிட்டார்.
வேலூர்:
பொதுப்பணித் துறை சார்பில் வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டம் ஏரிகுத்தி ஊராட்சியில் ரூ.1 கோடியே 60 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் அரசு உயர்நிலைப் பள்ளி, குடியாத்தம் வட்டம் தேவரிஷிக்குப்பத்தில் ரூ.1 கோடியே 60 லட்சத்து 81 ஆயிரம் செலவில் அரசு உயர்நிலைப்பள்ளி, காட்பாடி வட்டம் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் அருகே 36 ஏக்கர் பரப்பளவில் ரூ.16 கோடியே 45 லட்சம் மதிப்பில் மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், முழுமையாக விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Next Story






