search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புனரமைக்கப்பட்ட தேவாலயம்.
    X
    புனரமைக்கப்பட்ட தேவாலயம்.

    மானாமதுரை அருகேயுள்ள திரு இருதய ஆலய முதல் வெள்ளி திருப்பலி விழா நாளை நடக்கிறது

    மானாமதுரை அருகேயுள்ள புகழ்மிக்க திரு இருதய ஆலயம் உள்ளது. ஆங்கில மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு வெள்ளியாக கருதப்படுவதால் திருப்பலி விழா நாளை நடக்கிறது.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர். இங்கு புகழ்மிக்க திரு இருதய அருள் தலம் உள்ளது. ஆங்கில மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு வெள்ளியாக கருதப்படுகிறது.

    சிவகங்கை மறை மாவட்ட அருள் தலமாக உயர்த்தப்பட்ட வெள்ளி விழா ஆண்டின் நினைவாக கோவிலை புதுப்பித்தல் திருப்பணி தொடங்கியது. ஆலயத்தின் உள் பகுதியில் உள்ள சொரூபங்கள், தூண்கள், மேல் பகுதியில் மழைநீர் தேங்காமலும் ஆலயத்தை சுற்றி அடிப்பகுதியில் சுவர்களில் நீர்கசிவு ஏற்படதா வகையிலும் புதுப்பிக்கப்பட்டு தற்போது எழில்மிகு தோற்றத்தோடு காணப்படுகிறது.

    புதுப்பிக்கப்பட்ட கோவிலின் திரு நிகழ்வு விழா 2020-ம் ஆண்டின் முதல் வெள்ளியான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

    காலை திருப்பலி பூஜை சிவகங்கை மறை மாவட்ட குரு குல முதல்வர் அ.ஜோசப் லூர்து ராஜா தலைமையில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு நன்றி வழிபாடு, 10.40 மணிக்கு கோவில் புனிதப்படுத்துதல் நிகழ்ச்சியும், கூட்டு திருப்பலியும், சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் தலைமையில் நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் மாலை திருப்பலி பூஜை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் திண்டுக்கல் லியோனி சிறப்பு பட்டி மன்றம் நடைபெறுகிறது.

    இதற்கான முழு ஏற்பாடுகளை இடைக்காட் டூர் திரு இருதய அருள் தல பணியாளர் ரெமிஜியஸ் தலைமையில் மரியின் ஊழியர் அருள் சகோதரிகள், இடைக்காட்டூர், சமூக முன்னேற்ற சங்கம் மற்றும் பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.

    பக்தர்களுக்கு சுகாதார வசதி, மதுரை, சிவகங்கை, மானாமதுரையில் இருந்து சிறப்பு பஸ் வசதியும் உள்ளது.

    Next Story
    ×