என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: கூலிதொழிலாளி கைது

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காந்தல் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(வயது 19). கூலி தொழிலாளி.

    இவரது வீட்டின் அருகே 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் அருண்குமார் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி உடல் நலம் பாதிப்படைந்து காணப்பட்டாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அவளிடம் விசாரித்தபோது நடந்த சம்பவங்களை கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    Next Story
    ×