search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல்
    X
    உள்ளாட்சி தேர்தல்

    வாக்குச்சாவடி குளறுபடியால் வாக்களிக்க மறுத்த கிராம மக்கள்

    மானாமதுரை அருகே உள்ள கே.பெருங்கரையில் வாக்குச்சாவடி குளறுபடியால் வாக்களிக்க கிராம மக்கள் மறுத்துவிட்டனர். பின்னர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் சமரசம் ஏற்பட்டு வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே உள்ளது கே.பெருங்கரை. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் இதுவரை அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்து வந்தனர். ஆனால் தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இந்த கிராமத்தை ேசர்ந்த 398 வாக்காளர்களுக்கு மட்டும் வேறு வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் வாக்களிக்க மறுத்துவிட்டனர். இதை அறிந்த அதிகாரிகள் அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனை ெதாடர்ந்து அவர்களை அதே பகுதியிலேயே வாக்களிக்க அனுமதி அளித்தனர். பின்னர் பொதுமக்கள் வாக்களிக்க சென்றனர். இதனால் வாக்குப்பதிவு 1½ மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, கே.பெருங்கரையை சேர்ந்த நாங்கள் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் உள்ளூரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தோம். ஆனால் தற்போது 2½ கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கீழப்பிடாவூர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டியுள்ளது. தேர்தல் அலுவலர்கள் அலட்சியம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்களிக்க மறுத்துவிட்டோம். பின்னர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் எங்களது ஊரிலேயே வாக்களிக்க முடிந்தது என்றனர்.
    Next Story
    ×