என் மலர்
செய்திகள்

லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் போலீசார்.
வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய லாரியில் கடத்திய மதுபாட்டில்கள்- சாராயம் பறிமுதல்
நாகை அருகே வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய லாரியில் கடத்திய ரூ.20 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மது குற்றங்களை தடுக்கும் வகையிலும், உள்ளாட்சி தேர்தலையொட்டியும் போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் உத்தரவின்படி மதுவிலக்கு போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து சென்று மதுபானம் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நாகை அருகே திட்டச்சேரியில் தலைமை காவலர் வரதராஜன், மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் வீரசக்திவேல், சுரேந்திரமோகன், பொன்னியின் செல்வன், அன்பழகன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரியை வழிமறித்தனர். ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதையடுத்து போலீசார் அந்த லாரியை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.
ஏனங்குடி கடை தெருவில் சென்றபோது லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் அந்த லாரியை சோதனை செய்ததில் 31 ஆயிரத்து 200 மதுபாட்டில்கள் மற்றும் 5616 லிட்டர் சாராய பாட்டில்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மதுபாட்டில்கள் அனைத்தும் புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இந்த மதுபாட்டில்கள் அப்பகுதி வாக்காளர்களுக்கு வழங்க கடத்தி வரப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதைதொடர்ந்து லாரி மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நாகை மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்துக்கு போலீசார் கொண்டு வந்தனர். தப்பி ஓடிய டிரைவர் யார்? லாரி யாருடையது? என விசாரணை நடத்தி டிரைவரை தேடி வருகின்றனர்.
மேலும் மதுபாட்டில்கள் கடத்துவது பற்றி பொதுமக்களுக்கு தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தகவல் தெரிவிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் தெரிவித்துள்ளார்.

Next Story