என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பெண் சப்-இன்ஸ்பெக்டர் கணவர் மீது 2-வது மனைவி புகார்

    வேலூர் குறைதீர்வு கூட்டத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் கணவர் மீது அவரது 2-வது மனைவி புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டன. மாவட்ட கலெக்டர்கள் உள்பட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதிதாக தோன்றிய ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. அங்கு பொதுமக்கள் மனுக்கள் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மாருதி நகரை சேர்ந்த சித்ரா இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.அதில் எனது கணவர் குமார் ஏற்கனவே பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை திருமணம் செய்ததை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    என்னை ஏமற்றி ரூ.60 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்து கொண்டார். தற்போது என்னை பிரிந்து முதல் மனைவியிடம் சென்று விட்டார். என் கணவர் மோசடி செய்த நகை, பணம் ஆகியவற்றை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    அவர் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் உடனே அங்கு சென்று மனு கொடுக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து அவர் ராணிப்பேட்டைக்கு புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×