என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியல் (கோப்புப்படம்)
    X
    வாக்காளர் பட்டியல் (கோப்புப்படம்)

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 31 லட்சத்து 27,986 வாக்காளர்கள்

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் வேலூர் ஒருங்கிணைந்த (திருப்பத்தூர், ராணிப்பேட்டை) மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டது.

    ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 15 லட்சத்து 32885 ஆண்கள், 15 லட்சத்து 94921 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 180 பேர் உள்பட மொத்தம் 31 லட்சத்து 27 ஆயிரத்து 986 வாக்காளர்கள் உள்ளனர்.

    ஒருங்கிணைந்த மாவட்டம் முழுவதும் உள்ள 1665 வாக்குசாவடி மையங்கள் சப்-கலெக்டர், தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்பட மொத்தம் 1700 மையங்களில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இதனை பார்த்து விவரம் தெரிந்து கொள்ளலாம். புதியதாக பெயர் சேர்க்க, சுருக்கம் திருத்தம் செய்ய இன்று முதல் ஜனவரி மாதம் 22-ந் தேதி வரை படிவங்கள் வழங்கப்படுகிறது.

    பெயர் சேர்க்க படிவம்-6, நீக்க படிவம்-7, திருத்தம் செய்ய படிவம்-8, சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம்-8ஏ, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க படிவம்-6ஏ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றவர்கள் இ.சேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை நகலை பெற்று கொள்ளலாம்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம்:-

     சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம்




    Next Story
    ×