search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
    X
    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

    நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 89 பேர் போட்டியின்றி தேர்வு

    நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் 89 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 404 பதவிகளுக்கு 1479 பேர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
    நீலகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஏராளமானோர் விண்ணப்பித்தனர். நேற்றுமுன்தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள 393 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 1241 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில் 33 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 121 பேர் கடைசி நாளான நேற்று முன்தினம் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். மேலும் 89 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக 998 பேர் போட்டியிடுகிறார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள 35 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட 205 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 39 பேர் கடைசி நாளான நேற்றுமுன்தினம் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக 160 பேர் போட்டியிடுகிறார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள 59 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 334 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 37 பேர் கடைசி நாளான நேற்றுமுன்தினம் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக 289 பேர் போட்டியிடுகிறார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 42 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில் 1 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 9 பேர் கடைசி நாளான நேற்றுமுன்தினம் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக 32 பேர் போட்டியிடுகிறார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் 493 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 1822 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 49 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 206 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் 89 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 404 பதவிகளுக்கு 1479 பேர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
    Next Story
    ×