என் மலர்
செய்திகள்

கொள்ளை
நாகையில் துணை தாசில்தார் வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை
நாகையில் துணை தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் இளமதி. இவரது கணவர் அரிராமன். இவர் நாகையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். நாகை வெளிப்பாளையம் பெருமாள் கீழ வீதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் குடியிருக்கும் இவர்கள் இருவரும் பணி நிமித்தம் காரணமாக தினமும் காலையில் வீட்டை பூட்டி விட்டு, மாலை வீடு திரும்புவது வழக்கம்.
இந்நிலையில் தொடர்ந்து பகல் நேரங்களில் அவர்களது வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் உள்ள இளமதியின் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர்.
நீண்ட நேரமாக வீடு திறந்து கிடப்பதைப் பார்த்து அருகில் உள்ளவர்கள் இளமதிக்கும் அவரது கணவருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 4 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து துணை தாசில்தார் இளமதி, நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த வெளிப்பாளையம் போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பெங்களூரில் இருந்து களமிறங்கியுள்ள வெளி மாநில கொள்ளையர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வந்து இறங்கி உள்ளதாகவும், இவர்கள் பகல் நேரங்களில் பூட்டியிருக்கும் சில வீடுகளை நோட்டமிட்டு பின்னர் ஆள் இல்லாத அந்த வீடுகளில் ரகசிய அடையாள குறியீடும், ஆள் இருக்கும் வீடுகளில் மற்றொரு ரகசிய அடையாள குறியீட்டையும் பென்சிலால் வரைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதே பாணியில் துணை தாசில்தார் இளமதி வீட்டிலும் ரகசிய குறியீட்டை வரைந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
கடந்த ஓரிரு மாதங்களில் நாகையில் உள்ள ஒரு அரசு பள்ளி தலைமையாசிரியர் இளமாறன் என்பவர் வீடு உள்பட பல்வேறு வீடுகளிலும் வீட்டில் உள்ளவர்கள் வழக்கமாக வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு செல்லும் பகல்நேரத்தில் இதேபோன்ற பாணியில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறி இருப்பது நாகை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story