search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏரிக்கரையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
    X
    ஏரிக்கரையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

    குடியாத்தம் அருகே ஏரிக்கரையில் பச்சிளம் குழந்தை வீச்சு

    குடியாத்தம் அருகே ஏரிக்கரையில் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளங் குழந்தையை வீசி சென்ற தாய் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே உள்ள பாக்கம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் நேற்றிரவு காவலர்கள் செல்வம் சுப்பிரமணி ஆகியோர் பணியில் இருந்தனர் இரவு 2.15 மணிக்கு குடோன் எதிரே உள்ள ஏரிக்கரையில் குழந்தை அழும் சத்தம்கேட்டது.

    அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை குளிரில் நடுங்கியபடி துடித்து அழுது கொண்டிருந்தது. காவலர்கள் குழந்தையை தூக்கி துணியால் போர்த்தினர்.

    மேலும் இதுபற்றி குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பணியில் இருந்த ஏட்டு நவீன் மற்றும் ரோந்து பணியில் இருந்த போலீசார் அருண்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவலர்கள் உதவியுடன் பைக்கில் குழந்தையை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் .

    அங்கு டாக்டர்கள் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். குழந்தையின் தொப்புளில் அரசு ஆஸ்பத்திரிகளில் போடப்படும் கிளிப் மாட்டப்பட்டிருந்தது .

    இதனால் குழந்தை பிறந்து சில மணி நேரமே இருக்கும். மேலும் இந்த குழந்தை அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர். 3.8 கிலோ உள்ள இந்த பெண் குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது.

    உதட்டு பகுதியில் சிறியதாக கிழிந்தது போல உள்ளது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

    அங்கு குழந்தையை பராமரித்து வருகின்றனர். இதுகுறித்து பரதராமி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி வழக்குப்பதிவு செய்து ஏரிக்கரையில் குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×