search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்த காட்சி.
    X
    வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்த காட்சி.

    வேலூரில் கடும் போக்குவரத்து நெரிசல்- சிக்கி திணறுது வாகனங்கள்

    தீபாவளி பண்டிகையை யொட்டி வேலூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    வேலூர்:

    தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் துணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பஜார் வீதிகளில் குவிகின்றனர் .வேலூர் மார்க்கெட்டில் நேற்று மாலை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    இதேபோல் காட்பாடி ரோடு அண்ணாசாலை ஆகிய இடங்களில் உள்ள ஜவுளி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    நேற்று மாலை 6 மணி முதல் வாகன நெரிசல் ஏற்பட தொடங்கியது. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரீன் சர்க்கிளில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    போக்குவரத்து போலீசார் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் வாகனங்கள் க்ரீன் சர்க்கிள் அருகே வெளியேற முடியாமல் சிக்கின .

    தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுவதால் பஸ்நிலையம் நிரம்பி வழிகிறது. மேலும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பஸ்களில் முண்டியடித்து ஏறுகின்றனர்.

    பஸ்நிலையத்தில் இருந்து வெளியே மற்றும் உள்ளே வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்கின. புதிய பஸ் நிலையத்தில் இருந்து லட்சுமி தியேட்டர் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது ‌.

    இன்று தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்பவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் .மேலும் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குபவர்கள் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் வெளியே வருவார்கள்.

    இதனால் இன்று மேலும் நெரிசல் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க கூடுதல் போக்குவரத்து போலீசார் நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×