என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் விருப்பாட்சிபுரத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
Byமாலை மலர்23 Oct 2019 10:26 AM GMT (Updated: 23 Oct 2019 10:26 AM GMT)
வேலூர் விருப்பாட்சிபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் விருப்பாட்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் துண்டிக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் சீரான குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை விருப்பாட்சிபுரம் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் செய்தனர்.
வேலூர்- ஆரணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாகாயம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story
×