search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    வாலாஜாவில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

    வாலாஜாவில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வாலாஜா:

    வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டு பல்லி வெங்கடாஜலபதி தெரு, 23வது வார்டு லாலாபேட்டை தெத்து தெரு, கல்லூர்பேட்டை தெரு ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இதில் பல்லி வெங்கடாஜலபதி தெருவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைப்பதாக அப்பகுதியில் பொதுமக்களுக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து இன்று காலை பல்லி வெங்கடாஜலபதி தெரு, லாலாப்பேட்டை தெத்து தெரு, கல்லூரி பேட்டை தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் செல்போன் டவர் அமைக்கும் இடத்தில் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சில பேர் பள்ளத்தில் குச்சிகளையும் கற்களையும் செல்போன் டவர் பள்ளத்தில் போட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் முதியவர்கள் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
    Next Story
    ×