search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல்
    X
    டெங்கு காய்ச்சல்

    வேலூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி- லாட்ஜ், வீடுகளுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம்

    வேலூரில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வின் போது லாட்ஜ், வீடுகளுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொசு புழுக்கள் கண்டறியபட்டு அபராதம் விதித்து வருகின்றனர்.

    மாநகராட்சி 2-வது மண்டல அலுவலர் சிவக்குமார், முதுநிலை பூச்சியியல் வல்லுனர் முனுசாமி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் காந்திரோடு, பாபுராவ்தெரு பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட லாட்ஜிகளில் சோதனை செய்தனர்.

    அப்போது கொசு புழுக்கள் இருந்த 6 லாட்ஜிகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் இருந்த லாட்ஜிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

    அந்த பகுதியில் உள்ள வீடுகளில் நடந்த சோதனையில் 6 வீடுகளில் கொசு புழு இருந்தது தெரியவந்தது. அந்த வீடுகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மொத்தம் 18 ஆயிரத்து 300 அபராதம் விதித்தனர்.
    Next Story
    ×