என் மலர்
செய்திகள்

சாலை மறியல்
ஆழ்குழாய் கிணற்றை சீரமைக்ககோரி ஆலங்குடியில் பொதுமக்கள் சாலை மறியல்
ஆலங்குடியில் ஆழ்குழாய் கிணற்றை சீரமைக்ககோரி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகேயுள்ள பெருங்கொண்டான் விடுதியில் குடிநீருக்காக ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லை. எனவே கிணற்றை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலை கூழையன் விடுதி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து தகவல்அறிந்த சம்பட்டிவிடுதி போலீசார் மற்றும் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணை ஆணையர் சத்தியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story






