என் மலர்
செய்திகள்

விஷம்
கோபி அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து பலி
கோபி அருகே மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
கோபி அருகே உள்ள கூகலூரைச் சேர்ந்தவர் மாதம்மாள் (வயது 50). இவரது மகன் ஆண்டவன்.
ஆண்டவன் கடந்த 9 மாதத்துக்கு முன் உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். மகன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த மாதம்மாளுக்கு மகனின் மறைவு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. சரியாக சாப்பிடாமல் வேதனையில் காணப்பட்ட மாதம்மாள் வீட்டில் இருந்த போது திடீரென விஷத்தை குடித்து விட்டார். இதனால் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாதம்மாள் பரிதாபமாக இறந்து விட்டார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story