search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை
    X
    குழந்தை

    பொழிக்கரை கடற்கரையில் பிணமாக கிடந்த குழந்தை: கள்ளக்காதலில் பிறந்ததா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஈத்தாமொழி அருகே பொழிக்கரை கடற்கரையில் பிறந்து 3 மாதமே ஆன குழந்தை அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது. கள்ளக்காதலில் பிறந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    ஈத்தாமொழி அருகே பொழிக்கரை கடற்கரை கிராமத்தில் நேற்று காலை பிறந்து 3 மாதமே ஆன குழந்தை ஒன்று அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது. இதுபற்றி ஈத்தாமொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தர்மபுரம் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி கீதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடற்கரையில் இறந்து கிடந்த குழந்தை அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால் அந்த குழந்தையின் உடல் கடலில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கி இருக்கலாம் என்று தெரிகிறது. அழுகிய நிலையில் இருந்ததால் குழந்தையின் அடையாளத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனால் அந்த குழந் தையை யாராவது கடலில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். கடலில் குழந்தையை வீசி சென்றது யார்? கள்ளக்காதலில் பிறந்ததால் கடலில் வீசப்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×