என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆலங்குடி அருகே முன்விரோதத்தில் வாலிபரை தாக்கியவர் கைது

    ஆலங்குடி அருகே முன்விரோத காரணமாக வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

    ஆலங்குடி:

    ஆலங்குடி மேலநெம்ம கோட்டையைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 52). இவரும் ஆலங்குடி இந்திராநகர் முத்தையா மகன் முருகன் (40). இவர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் இருவரும் ஆலங்குடி சந்தப்பேட்டையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தாமரைச்செல்வன் உருட்டு கட்டையால் முருகனை பலமாக தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல்அறிந்ததும் ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தாமரைச் செல்வனை கைது செய்தனர்.

    Next Story
    ×