search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வனத்துறை சார்பில் ஓவியப்போட்டி நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    வனத்துறை சார்பில் ஓவியப்போட்டி நடைபெற்றபோது எடுத்த படம்.

    வனத்துறையின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், பேச்சுப்போட்டிகள்

    வனத்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், பேச்சுப்போட்டிகள் மற்றும் வினாடி-வினா போட்டிகள் புதுக்கோட்டையில் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையின் சார்பில் அக்டோபர் மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை வன உயிரின வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாவட்ட அளவில் ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம்.

    வழக்கம்போல் இந்த ஆண்டு வன உயிரின வார விழாவை முன்னிட்டு, வன உயிரின பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகள் மற்றும் வினாடி-வினா போட்டிகள் நேற்று புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் தண்ணீருக்கு கீழே வாழ்க்கை என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும், சுற்றுச் சூழல் காடுகள் மற்றும் வன விலங்குகள் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டியும், மனித வனவிலங்கு மோதல்கள் மற்றும் தணிப்பு என்ற தலைப்பிலும் பேச்சுப்போட்டியும் நடைபெற்றது.

    இதில் எல்.கே.ஜி. முதல் 4-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டியும், 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றது. இதேபோல கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார் பார்வையிட்டார். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 635 கலந்து கொண்டனர்.

    இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதேபோல போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் வனச்சரக அலுவலர்கள் சதாசிவம், சங்கர், வனவர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×