என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    மதுராந்தகத்தில் மாணவியை தாக்கிய ஆசிரியை சஸ்பெண்டு

    மதுராந்தகம் அருகே 5-ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியை சஸ்பெண்டு செய்து கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தை அடுத்த கீழ்புளியரன் கோட்டையில் உள்ள ஆரம்ப பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருபவர் லத்திகா.

    இவர் வகுப்பறையின் சாவியை தொலைத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை தேவி என்பவர் மாணவி லத்திகாவின் தலைமுடியை இழுத்து தாக்கினார். இதில் மாணவிக்கு காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சித்தாமூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மாணவியை தாக்கிய ஆசிரியை தேவியை சஸ்பெண்டு செய்து கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.

    Next Story
    ×