search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் விபத்து
    X
    ரெயில் விபத்து

    அரக்கோணம் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் மரணம்

    அரக்கோணம் அருகே ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த செஞ்சி பனப்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 35 வயது மதிக்கதக்க ஆண் பிணம் இருப்பதாக அரக்கோணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்பாபு, வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்தவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயிலில் இருந்து தவறி விழுந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×